கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை, திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கார் பந்தய போட்டியைப் பிரபலப்படுத்தியவர்களில் நரேன் கார்த்திகேயன் முக்கியமான ஒருவர். இவர் 2005-ம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான நரேன் கார்த்திகேயன் தற்போதும் கார் பந்தய பயிற்சிகளை அளித்து வருகிறார். இவரது வாழ்க்கை கதையை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார்.
முதல்முறையாக இந்தியாவில் கார் பந்தய வீரரின் படம் உருவாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.