சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்படத்தை 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அடுத்தகட்ட படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்தபடி பொங்கலுக்கு வெளியாகாது எனக் கூறப்பட்டுள்ளது.