சென்னை திருவான்மியூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது காதலன் விஷ்ணு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதேபோல் மற்றொரு பெண்ணையும் காதலிப்பதாகக் கூறி விஷ்ணு ஏமாற்றியது தெரியவந்துள்ளது.