ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து குதித்து உயிர் பிழைத்த தன்னை பாதுகாப்பாகச் சொந்த ஊருக்கு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் நன்றி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.
தொடர்ந்து, வெளிநாட்டுக் கப்பல் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், செங்கடல் வழியாக சென்ற சரக்கு கப்பல் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.
அப்போது, கடலில் குதித்த உயிர் தப்பிய அகஸ்டினை, மீட்பு கப்பல் மீட்டது. இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் அகஸ்டின் சொந்த ஊர் திரும்பினார்.
தன்னை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு அகஸ்டின் நன்றி தெரிவித்துள்ளார்.