நடிகை ஜான்விகபூர் தான் 2-வதாக நடிக்கவுள்ள தென்னிந்தியத் திரைப்படத்துக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தேவரா படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்துக்காக ஜான்வி கபூருக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேவரா படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்ற ஜான்வி தற்பொழுது அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.