நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளையொட்டி பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து குமரி அனந்தன் உட்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்ற அலுவல் பட்டியல் முதல் முறையாகத் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.