போர் நிறுத்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காசாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஹமாஸுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து மத்திய காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தியுள்ளது.
அங்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் படை வைத்திருக்கக் கூடும் எனக்கருதி, இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேற்கொள்ளவில்லை.
தற்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மூலம் அந்தப் பகுதியில் இஸ்ரேல் முதல் முறையாகத் தரைவழி தாக்குதலை மேற்கொள்ள உள்ளது.