புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.