வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்ற சீன தயாரிப்பான எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து உத்தாரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.