கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கைகள் ஏதும் கேட்கவில்லை என மத்திய காலச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த அவர், தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு மாநிலங்கள் அனுமதி கேட்கும்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இது தவிர மத்திய தொல்லியல் துறை சார்பில் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கைகள் ஏதும் கேட்கவில்லை என்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.