கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை போருக்கு அனுப்ப அந்நாட்டு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மாணவனை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையங்கோட்டை கீழ்ப்பாதி பகுதியை சேர்ந்த கிஷோர், கடந்த 2021-ம் ஆண்டு ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றார்.
இதையடுத்து பகுதி நேரமாக தனது நண்பர் நித்தீஷ் உடன் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவர்கள் டெலிவரி செய்த கொரியரில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறி இருவரையும் கைதுசெய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர் சிறையில் இருக்கும் இருவரையும் உக்ரைன் உடனான போருக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கிஷோரின் பெற்றோர், மகனை மீட்டுத்தரக்கோரி கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இதற்கிடையே, தம்மை காப்பாற்றும்படி மாணவர் கிஷோர் வெளியிட்டுள்ள ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.