மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Jul 29, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 22, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலின் சர்வதேச முன்னேற்ற கூட்டமைப்பும் தமிழகத் தோட்டக்கலைத்துறையும் ஒன்றிணைந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு விவசாயிகளுக்காக நடத்தவிருந்த பயிற்சி முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் பேரில் திமுக அரசு ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், குறைந்த பாசன வசதியில் நிறைய மகசூலுடன் வேளாண்துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் தொழில்நுட்பக் கலையை நமது தமிழக விவசாயிகளுக்குக் கற்றுத்தராமல் தடுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
க்கு அப்படி என்ன ஆனந்தம்? இதுவரை ‘சித்தாந்தம்’ எனும் பெயரில் கமிஷன் பெறும் பொருட்டு, திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டு, தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டதாக தெரிவித்துளளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் போரிடுவதால், தமிழக விவசாயிகள் இஸ்ரேலின் வேளாண் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்? இஸ்ரேல் தொழில்நுட்பத்தின் பயனாக ஹரியானா-வின் தோட்டக்கலை உற்பத்தி கடந்த 14 ஆண்டுகளில் 37% உயர்ந்துள்ளது.

அதேபோல் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இஸ்ரேல் கூட்டமைப்புடன் தங்களது வேளாண் உற்பத்தியை உயர்த்த முயற்சித்துவரும் வேளையில், ஓட்டுவங்கி அரசியலுக்காக, சிறுபான்மையினரைக் கவருவதாக நினைத்துக் கொண்டு ஏழை எளிய விவசாயிகளின் நலனைக் கைகழுவியுள்ளது திமுக அரசு.

புதிய விவசாய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள 100 விவசாயிகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு தயாராக இருப்பதாக தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அவர்களே உரைத்த நிலையில், தற்போது ஏன் இந்த புதிய நிலைப்பாடு?

இதை நிறுத்தியது ஏன்? தேர்தல் காலம் நெருங்கிவிட்டால், உழவர் நலன் கண்ணில் புலப்படாதா? வாக்கு வங்கி அரசியலுக்காக, உணவளிக்கும் விவசாயிகளின் நலனை அலட்சியப்படுத்தும் இந்தப் பாசிச திராவிட மாடல் கூட்டணி தனது மக்கள் விரோதப் போக்கால் விரைவில் வீழ்வது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

 

Tags: nternational Progress Federation of IsraelDMK governmentMarxist Communist Party.Tamil Nadu BJP state president Nainar NagendranIsrael Tamil Nadu Horticulture Department
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை!

Next Post

மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies