நடிகர் ரிஷப்ஷெட்டி நடித்த காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
3 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்றதாகவும், 250 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியதாகவும் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மேக்கிங் காட்சிகளைப் பார்க்கும்போது காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.
முன்னதாக ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.