பெத்தி படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராம் சரண், தான் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் பீஸ்ட் மோட் ஆன் என்ற தலைப்பில் ராம்சரணின் படத்தை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு இயக்கும் பெத்தி படம், கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது.
ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.