புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பழுதடைந்த அரசுப் பேருந்தைப் பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
பொன்னமராவதியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் மாணவர்கள் பேருந்தைத் தள்ளிவிட்டு இயக்க முயன்றனர்.
இந்நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்த பேருந்துகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.