மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மீண்டும் ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மலையாள இயக்குநரான ஜோஷி, தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார்.
இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நடித்து வெளியான மார்கோ, அதிகமான வன்முறைக்காக விமர்சிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆக்ஷன் படத்தில் உன்னிமுகுந்தன் இணைந்துள்ளார்.
இந்த படம் தனக்குத் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் மைல்கல்லாக அமையும் என உன்னிமுகுந்தன் தெரிவித்துள்ளார்.