ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜோரி மாவட்டத்தில் கனமழை காரணமாக தர்ஹாலி மற்றும் சக்தோ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இரு ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரஜோரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.