ரஷ்யாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலியாகினர்.
ரஷியாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்றது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, 82 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.