இந்தியா – பாகிஸ்தான் போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை நிறுத்த டிரம்ப் தீவிரத்துடன் பணியாற்றி வருகிறார் எனக் கூறினார்.
ஈரானின் அணு ஆலைகளை முற்றிலும் தகர்த்ததுடன், இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையிலும் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் எனத் தெரிவித்தார்.