போர்ஷே நிறுவனம் Taycan 4S பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தி, அதன் பிளாக் எடிஷன் மாடல்களின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய கார் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காருடன் வரும் இதர ஆப்ஷனல் பேக்கேஜ்களை தேர்வு செய்தால், இந்த விலை மேலும் அதிகரிக்கும்.
இந்த கார் வெறும் 3.7 வினாடிகளில் மணிக்குப் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.