நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், கைதான 4 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.