டாடா நிறுவனத்தின் நானோ கார் புதுப்பொலிவுடன் மீண்டும் இந்தியச் சந்தையில் கால்பதிக்க உள்ளது. எலெக்ட்ரிக் வேரியன்டில் வரும் நானோ கார்கள் மலிவு விலையில், அசத்தலான டிசைன்களில் வெளிவரவுள்ளது.
இருசக்கர வாகனங்கள் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகும் நிலையில், 2008ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு புதிய காரையே வாங்கலாம் என்ற புரட்சியை உருவாக்கியது டாடா குழுமம்.
டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் கனவுக் கார் தயாரிப்பான நானோ கார்கள், ஆன்ரோட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவின் குறைந்த விலை கார் என்ற பெயருடன் பிரபலமான நானோ, நடுத்தர மக்களும் கார் வாங்கலாம் என்ற எண்ணத்தை விதைத்தது.
2020-ல் நானோவின் விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதாலும், BS-6 நார்ம்ஸுக்கு நானோவின் இன்ஜினைச் சரிகட்ட முடியாததாலும், சஃபாரி ஸ்டார்ம் காரின் விற்பனையோடு நானோவின் உற்பத்தியையும் நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்…
இந்த நிலையில், புதிய ஸ்டைல், அசத்தலான டிசைன், பலவகை ஆப்சன்கள் என புதுப்பொலிவுடன் மீண்டும் களம் கண்டுள்ளது டாடா நானோ. hexagonal front grille, LED headlamps, daytime running lights, Bold alloy wheels மற்றும் பல வண்ணங்களில் கிடைக்கும் நானோ கார்கள், 3.1 மீட்டர் நீளமும், 180 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் பிஸியான சாலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகிறது.
624 cc, twin-cylinder petrol engine கொண்ட நானோ கார் 38 PS POWER. 51 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் தருகிறது. 24 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த கார், 60 கிலோ மீட்டர் வேகத்தை 8 நொடிகளில் எட்டக்கூடியது. அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிலோ மீட்டர் என்றும், லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியது என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதுமட்டுமன்றி, 4 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார், 7 அங்குல டச் ஸ்க்ரீன், டிஜிட்டல் டிரைவர் கிளஸ்டர், பவர் விண்டோஸ், சீட்பெல்ட் ரிமைண்டர்ஸ் உடன் Sunroof- எனச் சொகுசு கார்களில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் நானோ கார்களில் கொண்டுவந்திருப்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
எக்ஸ் ஷோரூம் விலையில், 2 லட்சத்து 80 லட்சம் ரூபாய் எனத் தொடங்கும் நானோ கார்கள், விரைவில் CNG, எலெக்ட்ரிக் வேரியன்ட்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நானோ கார்களை மாதம் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் EMIஆக செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்திருப்பது பலரையும் குதூகலப்படுத்தியிருக்கிறது.