மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!
Oct 10, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 22, 2025, 07:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், தமிழகத்தின் பல மலைக் கிராமங்கள், சாலை வசதி இன்றி இருக்கின்றன.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஈசல்திட்டு மலைக் கிராமத்தில், சாலை வசதி இல்லாததால், மணியன் என்ற இறந்தவர் உடலை, கரடுமுரடான மலைப் பகுதியில், தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

உடுமலைப்பேட்டை பகுதியில், பல மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் பல ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட இதுவரை செய்து தரப்படவில்லை. இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை.

பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், போராடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ₹59 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சாலை அமைக்கப்படவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.

மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்துக்கு, சுமார் ₹ 6,000 கோடி வரை தமிழகத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தத் திட்டத்துக்கு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் திமுக அரசு தெரிவித்தது. எங்கே சென்றது இந்த நிதி எல்லாம்? தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன.

தமிழகத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், மிகவும் அவலநிலையில் வசித்து வருகிறார்கள். உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, அவை அனைத்திற்கும் சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Where did all the central government funds go?: Annamalai Question
Share
Tweet
SendShare
Previous Post

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

Next Post

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

Related News

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies