"த்ரிஷ்யம்" பாணியில் கொடூரக் கொலை - மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
Aug 8, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

Murugesan M by Murugesan M
Jul 22, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் பார்க்கலாம்… விரிவாக.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம்தான் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை.

இத்திரைப்படம், தமிழ், இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இதுபோன்ற சம்பவம்தான் மும்பையை அலறவிட்டிருக்கிறது. ஆனால் கதைதான் வேறு. மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான விஜய் சவான். 15 நாட்களாக அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. விஜய் சவானின் வீட்டிற்குச் சென்ற அவரது சகோதரர்கள் அண்ணனைப் பற்றி விசாரிக்க, விஜய் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார் மனைவி கோமல் சவான்.

விஜய் பற்றிய துப்பு கிடைக்காத நிலையில், சில நாட்கள் கழித்து சவான் வீட்டிற்குச் சென்ற சகோதரர்களுக்கு, வீடு பூட்டப்பட்டிருப்பதும், கோமல் சவானின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், அறை ஓரத்தில் சம்பந்தமே இல்லாமல் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்த பகுதியை தோண்டத் தொடங்கினர். துர்நாற்றம் வீச, விஜயின் ஆடையை முதலில் வெளியே வந்தது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு, சிதைந்த நிலையிலிருந்த விஜய்யின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

அண்மையில் விஜய் மனைவி கோமல் சவான், வீட்டிற்குக் கூலித்தொழிலாளரை அழைத்து வந்து, 4 அடி ஆழக் குழி தோண்டியதும், மற்றொரு நாளில் வேறொரு தொழிலாளியை வைத்து அதே இடத்தில்  டைல்ஸ் பதித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதிய வீடு வாங்கத் திட்டமிட்டிருந்த விஜயின் வங்கிக்கணக்கில் இருந்து, லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

20 வயது கல்லூரி மாணவர் மோனு என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கோமல் சவான், தனது 8 வயது மகனுடன் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில்,  அவர்கள் பிடிபட்டால்தான் கொலை எப்படி நடந்தது என்பது தெரியவரும் என்பதால் போலீஸ் விசாரணை நீண்டுள்ளது.

Tags: mumbaicrime news todayBrutal murder in the style of "Drishyam" - the Bagheer incident that shocked Mumbaiமும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்"த்ரிஷ்யம்" பாணி
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

Next Post

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies