சென்னை தேனாம்பேட்டை அருகே திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக நுட்பனர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் காலியாக உள்ள 800க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பக் கோரியும், ஆய்வக நுட்பனர் பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வெயிட்டேஜ் முறையை மாற்ற வலியுறுத்தியும் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆய்வக நுட்பனர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி, காலை மணிக்கு தேனாம்பேட்டை சந்திப்பு பகுதி மற்றும் டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் பகுதிக்கு வந்த ஆய்வக நுட்பனர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு ஆய்வக நுட்பனர் பணியிடங்களைக் கூட திமுக அரசு நிரப்பவில்லை எனக் கண்டன முழுக்கங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த தங்களை போலீசார் கைது செய்ததாகவும் ஆய்வக நுட்பனர்கள் குற்றம்சாட்டினர்.