தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோட்டில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் அப்பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த 6 மாதமாக 20 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான ஒரு கிலோ தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல், 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.