நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதற்கட்டமாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். இந்த பயணத்தின்போது இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவா்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, இந்த ஒப்பந்ததுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மேலும், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.