புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மதுபாலன், சொந்தமாக சுற்றுலா படகை இயக்க அனுமதிகோரி சுற்றுலாத் துறையிடம் மனு அளித்திருந்தார். ஓராண்டாக எந்த பதிலும் வராததால் சுற்றுலாத்துறை நீர் சாகச விளையாட்டு பிரிவின் மேலாளர் பாஸ்கரை அணுகி உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
அப்போது உதவுவதாக கூறிய பாஸ்கர், மதுபாலனிடம் பணம் மற்றும் மீன்களை லஞ்சமாக பெற்று வந்துள்ளார். இதேபோல 50க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி பாஸ்கர் பணம் பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மதுபாலன் புகாரளித்த நிலையில், பாஸ்கர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.