இந்து மத வெறுப்பாளரான மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் பெயரை சென்னையில் உள்ள வேடல்ஸ் சாலைக்கு வைத்தது திமுக அரசு செய்த வெட்கக்கேடான செயல் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துளள பதிவில், அவர் இந்துக்கள் மீது தீவிர வெறுப்புணர்வை உமிழும் வகையில் பேசியவற்றை காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
இந்துக்கள் மீது வன்முறையைத் தூண்டும் விதத்திலும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் எனறும், திமுகவின் சிறுபான்மை ஆதரவு எல்லையை மீறிப் சென்று கொண்டுள்ளதாகவும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் இவையனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். எனவே, வேடல்ஸ் சாலைக்கு எஸ்றா சற்குணம் பெயரை வைத்த இந்த முடிவை அறிவாலய
அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.