ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகளவில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வணிக ரீதியாகப் பல சாதனைகளைச் செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.