திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், லாரியில் இருந்து டேபிள் மற்றும் பெஞ்ச்சுகளை இறக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கோட்டாட்சியர் குறைதீர் கூட்டத்துக்கு வந்த அதிகாரிகள், லோடுகளை இறக்கும் பணியில், மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதைக் கண்டு அதிருப்திக்குள்ளாகினர்.