நடிகர் தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது.
நடிகர் தனுஷ் போர் தொழில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படமொன்றில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.