திருவள்ளூரில் நில ஆவணங்களில் அனுமதியின்றி கையெழுத்திட்ட நில அளவையரை மாவட்ட ஆட்சியர் பிரதாப் சரமாரி கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நில உரிமையாளர் ஒருவர் தனது நிலத்தின் ஆவணங்களில் அனுமதியின்றி கையெழுத்திடப்பட்டுள்ளதாகப் புகார் அளித்தார்.
அப்போது நில அளவை ஆய்வாளரை நேரில் அழைத்து கேள்வி எழுப்பினார். இதற்கு உரியப் பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கத்துடன் வரவில்லை என்றால் பணியிடைநீக்கம் செய்வேன் எனக் கடிந்துகொண்டார்.