தாம் நடிகை ஹன்சிகாவை பிரிந்துவிட்டேனா என்பது குறித்து அவரது கணவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகத் தகவல் பரவி வருகின்றன.
இதற்கு விளக்கமளித்துள்ள அவரது கணவர் சோஹைல் கட்டாரியா, நாங்கள் பிரிந்து விட்டதாகப் பரவும் தகவல்கள் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.
இருப்பினும் இதுவரை நடிகை ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.