கோவையில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 37 இ-காமர்ஸ் சேமிப்பு கிடங்குகளிலும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவற்றை அங்கேயே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.