சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தங்களது பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
தனியார் மயமாக்குவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்கினால் சம்பளம் குறைவாகக் கிடைக்கும் எனவும் கூறினர்.
மேலும், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்காகச் சேவை செய்த தங்களைப் பணி நிரந்தம் செய்ய வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.