டிஜிட்டல் உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைத்துறை மேம்பட்டுள்ளதாக நடிகர் கிங்காங் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் நடந்த பிறந்த நாள் விழாவில் திரைப்பட காமெடி நடிகர் கிங்காங் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைத்துறையில் தற்போதுள்ள இயக்குனர்கள் தெளிவாக உள்ளனர் என்றும், ரசிகர்களின் எண்ணத்தைத் தெரிந்து சரியான திரைப்படங்களைக் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தனது மகள் திருமணத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு எனவும் நடிகர் கிங்காங் தெரிவித்தார்.