சென்னையில் 2வது மாடியில் இருந்து கிழே விழுந்த குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கு மாஸ் என்ற 2 வயதுக் குழந்தை உள்ளது. இந்த குழந்தை வீட்டின் 2 மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் குழந்தையை உடனே மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்குக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 2 வயதுக் குழந்தை மாடியிலிருந்து கீழே விழும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.