தான் அதிக வெள்ளையாக இல்லாததால் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை நடிக்க வைக்க வேண்டாம் என முடிவு செய்ததாகப் பாலிவுட் நடிகை வாணி கபூர் தெரிவித்துள்ளார்.
சுத் தேசி ரொமான்ஸ், பெஃபிக்ரே, மற்றும் வார் ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் வாணி கபூர். அண்மையில் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த அவர், தான் நடிக்க வந்த காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்ததற்காகவும், அதிக வெள்ளையாக இல்லதாதற்காகவும் படங்களில் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தன்னை நிராகரித்த படத்தயாரிப்பாளர் மும்பையைச் சேர்ந்தவரல்ல எனவும் வாணி கபூர் கூறினார்.