கடந்த சட்டமன்ற தேர்தலில் விடியல் தரப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினர் இன்றளவும் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தமிழகத்தில் 525 வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சி அமைத்த திமுக இன்றைக்கு 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், மின் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம் என ஆசைவார்த்தை காட்டிய திமுக, மின்சார கட்டணத்தை உயர்த்தியதுதான் மிச்சம் எனவும் தெரிவித்தார்.