இத்தாலியில், குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிய ஆய்வாளரை மீட்புக்குழு பத்திரமாக மீட்டது.
இத்தாலியின் வடமேற்கில் அமைந்துள்ள பீட்மாண்ட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த ஆய்வாளர் ஒருவர், குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்.
63 வயதான அந்த ஆய்வாளர், பாறைகள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்த நிலையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் இறங்கிய மீட்புக்குழு, குறுகலான வளைந்து நெளிந்த பாதையைக் கடந்து உள்ளே சென்றது.
பின்னர், வெடிபொருட்களைப் பயன்படுத்தி குகையை அகலப்படுத்தி, அந்த ஆய்வாளர் மேலே கொண்டு வரப்பட்டார். பிறகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.