லண்டனில் சைவ உணவகத்தில், யூடியூபர் ஒருவர் அசைவம் சாப்பிட்டு பிராங்க் வீடியோ வெளியிட்ட நிலையில் இஸ்கான் அமைப்பினர் அமைதியாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
லண்டனில் இஸ்கான் அமைப்பு சார்பில் கோவிந்தா என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்குச் சென்ற யூடியூபர் ஒருவர் அசைவம் சாப்பிட்டு பிராங்க் வீடியோ வெளியிட்டார்.
இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக, KFC உணவகத்தின் வெளியே கிருஷ்ண பக்தர்கள் பஜனை பாடி எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.