சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பிய இந்திய வீரர் நடப்பதற்குப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற சுபன்ஷு சுக்லா கடந்த சில தினங்களுக்கு முன் பூமி திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் புவி ஈர்ப்பு விசையில்லாத சூழலிலிருந்ததால் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சுபன்ஷு சுக்லா இயல்பாக நடப்பதற்குப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.