மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்லா அருகே கிணற்றில் விழுந்த புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மல்கேடி கிராமத்தில் உள்ள கிணற்றில் புலி ஒன்று தவறி விழுந்ததாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி புலியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலிக்குச் சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
 
			 
                    















