திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம் திறக்கப்பட்டது.
இதனை அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், இந்த ஆய்வகத்தில் அன்னப்பிரசாதம் மற்றும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் சோதிக்கப்படும் என்று கூறினார்.
முதன்முறையாக, நெய்யின் தரத்தைச் சோதிக்கத் திருமலையிலேயே ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.