அஜித்குமார் கொலை வழக்கில் மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கில் 10-வது நாளாக சிபிஐ விசாரணை நடைபெற்றது.
வழக்கு தொடர்பாகத் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, கோவில் பணியாளர்கள் கண்ணன், கார்த்திக் உள்ளிட்டோருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் தனித்தனியாகக் கேள்விகளை எழுப்பி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.