இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்காக நேற்று டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டார்.
இங்கிலாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவரை காண அங்கு கூடியிருந்த மக்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் பிரதமர் கீர் ஸ்டார்மரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முறைப்படி இறுதி செய்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளிலும் இங்கிலாந்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.