கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை கோரிக்கை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் சிறு, குறு தொழில் அமைப்பான லகு உத்யோக் பாரதி அமைப்பின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தமிழக அரசு தேர்வுகள் முறையாக நடப்பதில்லை எனவும், தேர்வுகள் முடிந்த பின் முறையாக பாதுகாக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், 2026 தேர்தலில் திமுக தோற்பது உறுதி எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் காவல்துறை அதிகாரியை தரிசனம் மேற்கொள்ள அனுமதித்தது கண்டிக்கத்தக்கது எனவும், இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை கோரிக்கை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.