கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்குவதற்கான ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் வரும் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
அதனையொட்டி, ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்டு அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்க ஏதுவாக அப்பகுதியில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக கோயில் அருகேயுள்ள தனியார் நிலத்தில் 3 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, செடி, கொடிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி ஹெலிபேட் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.