ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு உப்புத்துறை யானைகஜம் மலைப்பகுதி வழியாக செல்ல மூன்று நாட்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
இந்த நிலையில், நடப்பாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோயிலுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, உப்புத்துறை யானைகஜம் மலைப்பகுதி வழியாக பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில், மலைப்பகுதிக்கு கீழே சோதனை சாவடி அமைத்துள்ள வனத்துறையினர், தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்களை அனுமதி வருகின்றனர். மலைப்பாதை வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டதால், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையை பயன்படுத்தி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.